Wednesday, 21 August 2013

புதுமையான பருப்புக் கீரை மசியல்

புதுமையான பருப்புக் கீரை மசியல் 

தேவையான பொருட்கள் :
பருப்புக் கீரை 1 கட்டு 
முளைத்த பச்சைப் பயறு 1 கப் 
சின்ன வெங்காயம் 8, பொடியாக நறுக்கியது 
1 சிறிய துண்டு தேங்காய் 
1 சிறிய தேக்கரண்டி சீரகம் 
1 சிறிய தக்காளி 
1 தேக்கரண்டி சோள மாவு 
3 தேக்கரண்டி ஆடையுடன் கூடிய பால் 

முதலில் கீரையை நன்கு அலசி ஆய்ந்து பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும் .
முளைத்த பச்சை பயறை நன்கு குழைய வேக விடவும் . 
ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு சிறிது சீரகம் போட்டு பொரிந்த தும்  பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் .(1 வெங்காயம் அரைப்பதற்கு எடுத்து வைக்கவும் )
1 சின்ன வெங்காயம், தேங்காய் துண்டு , சீரகம் , தக்காளி அனைத்தையும் நன்கு அரைத்து வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவு.
இப்போது வெந்த  பயறு, நன்கு மசித்த கீரை இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கடைசியாக சிறிதளவு பால் (ஆடையுடன் ) எடுத்து அதில் சோள  மாவு கரைத்து ஊற்றவும் .

இது  நாம் எப்போதும் செய்யும் மசியல் போல் இல்லாமல் வித்யாசமான சுவையுடன் அருமையாக இருக்கும். சப்பாத்தி , சாதம்  இரண்டுக்கும் ஏற்வையாக  இருக்கும்.
இந்த முறையில் எந்தக்  கீரையும்  செய்யலாம்.

No comments:

Post a Comment