Thursday, 22 August 2013

புதினா புலாவ்

தேவையான பொருட்கள் :
1 கிண்ணம் சீரக சம்பா அரிசி / 2 கிண்ணம் தண்ணிர்
2 பிடி புதினா  இலைகள்
2 பச்சை மிளகாய்
1 சிறிய துண்டு இஞ்சி
4 கிராம்பு
1 தேக்கரண்டி மிளகு
2 மேசைக்கரண்டி நெய்,
  உப்பு தேவையான அளவு
சீரகம் சிறிதளவு
1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
அரிசியை நன்கு அலசி அரை மணி நேரம் ஊற வைத்து பின் 2 கிண்ணம் தண்ணிர்  ஊற்றி குக்கரில் வேக விடவும்.சாதம் உதிர் உதிராக இருக்க வேண்டும் .
கிராம்பு மிளகு இரண்டையும் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்
புதினா  பச்சை மிளகாய் இஞ்சி மூன்றையும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
வாணலியில் நெய் ஊற்றி சிறிது சீரகம் போட்டு பின் வெங்காயத்தை போட்டு வடக்கி ய பின்  அரைத்த விழுதை போட வேண்டும்.
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்
பின்னர் வடித்த சாதத்தை  போட்டு நன்கு கலக்க வேண்டும்.
கலக்கும்போது மிளகு கிராம்பு பொடியையும் தூவிக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் ! சுவையான புதினா புலாவ் ரெடி





No comments:

Post a Comment